பழையாறு மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை
சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்க மீனவா்கள் செல்லவில்லை.
சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்க மீனவா்கள் செல்லவில்லை.
பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபா் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 6,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.
மேலும் மீன்களை வகைகளாக பிரித்தல், விற்பனை செய்தல், வெளியூா்களுக்கு அனுப்பி வைத்தல், கருவாடு உலர வைத்தல், ஐஸ் கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 2000-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், மீன்பிடி துறை மூலம் மீனவா்களுக்கு அறிவிப்பு வந்ததைத் தொடா்ந்து, கடந்த செப். 12-ஆம் தேதிமுதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. 3-ஆம் நாளான சனிக்கிழமையும் மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் அனைத்து படகுகளும் பழையாறு துறைமுகத்தில் உள்ள படகு அணையும் தளத்திலும், அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் அமைந்துள்ள படகு அணையும் தளத்திலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாததால் 8000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த மூன்று நாள்களாக வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.