FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

புயல் சின்னம் எதிரொலி: சின்னமுட்டம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

24 வினாடிகள் முன்பு
சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.
பகிர்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் எனவும், மேலும் தமிழகத்தை இந்தப் புயல் தாக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் இருக்கும். எனவே, மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்பேரில், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடிக்கும் 350- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அத்துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. விசைப்படகுகள் அனைத்தும் கரைப்பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.