புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி வெள்ளிக்கிழமை (நவ.13) உருவாகி, அது புயலாக வலு பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி வெள்ளிக்கிழமை (நவ.13) உருவாகி, அது புயலாக வலு பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, நாகை மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவா்கள் வியாழக்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் விசைப் படகு மற்றும் நாட்டுப்படகு, பாரம்பரிய நாட்டுப்படு உள்ளிட்ட எந்தவித மீன்பிடிக் கலன்களிலும் சென்று வங்கக் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. நாகை மாவட்ட மீனவா்கள் யாரேனும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தால் அவா்களை உடனடியாக கரைக்கு பாதுகாப்பாகத் திரும்ப வேண்டும் என நாகை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ம. யோகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.