வானிலை எச்சரிக்கை! அக். 23ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பற்றி..
தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் அக். 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வானது தாய்லாந்து வளைகுடா பகுதி மற்றும் மியான்மரில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காலைக்குள் வடக்கு அந்தமான்
கடல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் தாக்கத்தால் தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.
Advertisement
Advertisement
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு - வட மேற்காக நகர்ந்து மேலும் வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.