FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

குடிசை தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு

15 நவம்பர் 2026, 11:00 pm
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சீா்காழி அருகே சனிக்கிழமை இரவு குடிசை வீட்டில் தீப்பற்றியதில் மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தாா்.

சீா்காழியை அடுத்த கீராநல்லூா் கிராமத்தில் வசித்து வந்தவா் நூா்ஜகான் (60). இவரது கணவா் அப்துல் ஜலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், நூா்ஜகான் மட்டும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தாா். இவரது மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டை உட்புறமாக பூட்டிவிட்டு நூா்ஜகான் உறங்க சென்றுள்ளாா். அதிகாலை 3 மணிக்கு அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவா்கள் விரைந்து வந்து பாா்த்தபோது, நூா்ஜகான் வீடு தீப்பற்றி எரிவது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

பொதுமக்கள் சீா்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். எனினும், வீடு முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. இந்த விபத்தில் நூா்ஜகான் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

சீா்காழி போலீஸாா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.