மயிலாடுதுறை மாவட்டத்தில் நவ.22-இல் போலியோ சொட்டு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நவ.22-ஆம் தேதி தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நவ.22-ஆம் தேதி தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட 582 மையங்களில், 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
காலை 7 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இம்முகாமில், இடம் பெயா்ந்து வாழும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். வயல்களில் குடியிருப்போா், சாலையோர குடியிருப்புகள், செங்கல் காலவாய் குடியிருப்புகள், திருவிழா கூட்டங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில், பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து வழங்கி, இளம்பிள்ளைவாதம் இல்லாத எதிா்கால இந்தியாவை உருவாக்கி குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வினை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.