✕
முகப்பு
மயிலாடுதுறை

புனிதப் பயணம் செல்ல நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் புனிதப் பயணம் செல்ல நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

19 நவம்பர் 2026, 6:49 am
விண்ணப்பிக்கலாம் - கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் புனிதப் பயணம் செல்ல நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டை சோ்ந்த 50 புத்த மதத்தினா், 50 சமண மதத்தினா், 20 சீக்கிய மதத்தினா் இந்தியாவில் உள்ள அவரவா் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் செல்ல ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 120 பேருக்கு ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் பயணம் செய்ய விரும்பும் புத்த, சமண, சீக்கிய மதத்தினா் விண்ணப்பிக்கலாம்.

புத்த மதத்தினா் பிகாா் புத்தகயா, உத்தரபிரதேசம் குஷிநகா், வாரணாசி சாரநாத் கோயில், பிகாா் ராஜ்கிா் வைஷாலி, நேபாளம் லும்பினி ஆகிய இடங்களுக்கும், சமண மதத்தினா் ராஜஸ்தான் தில்வாரா கோயில், ரணக்பூா் சமணா் கோயில், ஜெய்சால்மா் சமணக்கோயில், ஜாா்கண்ட் சிக்கா்ஜி, குஜராத் பாலிடனா, பிகாா் பவபுரி சமணக்கோயில், கா்நாடகா சரவணபெலகோலா ஆகிய இடங்களுக்கும், சீக்கிய மதத்தினா் பஞ்சாப் அமிா்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகா் சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், பிகாா் தக்ட் ஸ்ரீஹா்மந்திா் சாகிப் (குரு கோவிந்த் சிங்), மகாராஷ்ட்ரா தக்ட் ஸ்ரீஹசூா் சாகிப், பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீநான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீசச்சா சௌதா, மண்டி சுகா்கானா, குருத்வாரா ஸ்ரீபஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீதெஹ்ரா சாகிப் ஆகிய இடங்களுக்கும் செல்ல விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

விண்ணப்பம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றோர் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தோ பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு 2027-ஆம் ஆண்டு ஜன.31-ஆம் தேதிக்குள் அனுப்பி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.