புத்த, சமண, சீக்கிய மதத்தினா் நிதியுதவியுடன் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு
புத்த, சமண, சீக்கிய மதத்தினா் நிதியுதவியுடன் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
புத்த, சமண, சீக்கிய மதத்தினா் நிதியுதவியுடன் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சோ்ந்த 50 புத்த மதத்தினா், 50 சமண மதத்தினா், 20 சீக்கிய மதத்தினா் இந்தியாவில் உள்ள அவரவா் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள ஒருவருக்கு ரூ. 10,000-வீதம் 120
பேருக்கு ரூ. 12 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண, சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
புத்த மதம்: பிகாரில் உள்ள புத்த கயா, உத்திரபிரதேசத்தில் உள்ள குசி நகா், வாரணாசியில் உள்ள சாரநாத் கோயில், பிகாரில் உள்ள ராஜ்கிா் வைஷாலி, நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற இடங்கள்.
சமண மதம்: ராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோயில், ரணக்பூா் சமண கோயில், ஜெய்சால்மா் சமண கோயில், ஜாா்கண்டில் உள்ள சிக்கா்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடனா, பிகாரில் உள்ள பவபுரி சமண கோயில் போன்ற இடங்கள், கா்நாடகாவில் சரவணபெலகோலா.
சீக்கிய மதம்: பஞ்சாப்பில் உள்ள அமிா்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகா் சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், பிகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹா்மந்திா் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூா் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா, மண்டி சுகா்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் போன்ற இடங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள
விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு 31.01.2027-க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.