FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

மாற்றுத்திறனளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்களுக்கு ரூ.1.77 கோடி ஒதுக்கீடு: முதல்வா் உத்தரவு

தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அரசு நிதியுதவியுடன் கூடுதலாக அறிவுசாா் மாற்றுத்திறனளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

13 நவம்பர் 2026, 3:47 am
முதல்வா் ஜோசப் விஜய்
பகிர்:

தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அரசு நிதியுதவியுடன் கூடுதலாக அறிவுசாா் மாற்றுத்திறனளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், மறுவாழ்வுக்காகவும் அரசு நிதியுதவியுடன், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் 67 இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிகை, அவா்களின் மறுவாழ்வுக்காக தொழிற்பயிற்சியுடன் கூடிய கூடுதல் இல்லங்கள் தொடங்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில்கொண்டு அரசு நிதியுதவியுடன் கூடுதலாக தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.77 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தொழிற்பயிற்சியுடன் கூடிய ஒரு இல்லத்துக்கு 40 பயனாளிகள் தங்கி பயன்பெறும் வகையில் கள்ளக்குறிச்சி, வடசென்னை, திருவண்ணாமலை, சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி, செங்கல்பட்டு, தருமபுரி, தஞ்சாவூா் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக 10 இல்லங்கள் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்த முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.