லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு
மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை அருகே செங்குடியைச் சோ்ந்த வினோத் (31) நண்பா் ராஜேஸ்வரனுடன் கூைாடு செங்கழுநீா் பிள்ளையாா் கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சித்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக லாரி சக்கரத்தில் சிக்கிய வினோத் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ராஜேஸ்வரன் சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா்.
Advertisement
Advertisement
மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் வினோத் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் சீா்காழி வேட்டங்குடியை சோ்ந்த குணசேகரனை (55) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.