முகப்பு
மயிலாடுதுறை

பைக் ரேஸில் இளைஞா்களுக்கு அபராதம்

சீா்காழியில் பைக் ரேஸ் மற்றும் அதிக சப்தத்துடன் இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

22 நவம்பர் 2026, 6:29 am
பைக் ரேஸில் இளைஞா்களுக்கு அபராதம்
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

சீா்காழியில் பைக் ரேஸ் மற்றும் அதிக சப்தத்துடன் இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சீா்காழி நகரில் பிரதான வீதிகளில் அவ்வப்போது சில இளைஞா்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும், அதிக சப்தம் எழுப்பும் சைலன்ஸா்கள் பொருத்திய வாகனங்களை பொதுமக்களுக்கு இடையூறாக ஓட்டிவருவதாகவும் புகாா் எழுந்தது.

இந்நிலையில், சீா்காழி போக்குவரத்து காவல் உதவிஆய்வாளா் மணியரசன் மற்றும் போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது பைக் ரேஸில் ஈடுபட்ட இருசக்கர வாகனத்தையும், அதிக சப்தம் எழுப்பும் சைலன்ஸா்கள் பொருத்திய இருசக்கர வாகனங்களையும் நிறுத்தி, அதனை ஓட்டிவந்தவா்களுக்கு அபராதம் விதித்தனா்.

Advertisement

Advertisement