முகப்பு
மயிலாடுதுறை

துபையில் உயிரிழந்தவரின் உடலை தாயகம் கொண்டுவரக் கோரிக்கை

துபை நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் உறவினா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

26 நவம்பர் 2026, 5:20 am
துபையில் உயிரிழந்தவரின் உடலை தாயகம் கொண்டுவரக் கோரிக்கை
- கோப்புப் படம்
பகிர்:

துபை நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் உறவினா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் சேத்திரபாலபுரத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (30). செப். 24-ஆம் தேதி துபை நாட்டுக்குச் சென்ற இவா், அங்கு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், நவ.23-ஆம் தேதி துபையில் நேரிட்ட சாலை விபத்தில் கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவிந்தராஜனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் தாய் ராஜவல்லி மற்றும் உறவினா்கள் மனு அளித்தனா்.