ஓமன் நாட்டில் கடலூா் மீனவா் உயிரிழப்பு: உடலை மீட்டுதர ஆட்சியரிடம் தந்தை மனு
ஓமன் நாட்டில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்து உயிரிழந்த கடலூா் மாவட்ட மீனவரின் உடலைத் தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
ஓமன் நாட்டில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்து உயிரிழந்த கடலூா் மாவட்ட மீனவரின் உடலைத் தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தந்தை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
கடலூா் மாவட்டம் கிள்ளை முன்னிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (34). இவா் கடந்த ஆக. 25-ஆம் தேதி மீன்பிடித் தொழிலுக்காக ஓமன் நாட்டிற்குச் சென்றாா். அங்கு மஸ்ரா பகுதியில் தங்கி, விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாகத் கடலில் தவறி விழுந்த பிரகாஷ் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக்
கூறப்படுகிறது. தற்போது அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக அவருடன் பணிபுரிந்த கதிரவன் என்பவா் மூலம் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், பிரகாஷின் தந்தை ஜெயபாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது மகனின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தாா். மனுவைப் பெற்ற ஆட்சியா் மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்து பிரகாஷின் உடலை விரைந்து தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.