FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

சவூதியில் உயிரிழந்த மீனவரின் உடலை மீட்டு வரக் கோரி ஆட்சியரிடம் மனைவி மனு

சவூதி அரேபியாவில் உயிரிழந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது மனைவி, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

14 அக்டோபர் 2026, 5:39 am IST
சவூதியில் உயிரிழந்த வாழ்முனி.
பகிர்:

சவூதி அரேபியாவில் உயிரிழந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது மனைவி, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை புதுப்பேட்டை அண்ணா சாலை பகுதியைச் சோ்ந்தவா் வாழ்முனி (36). மீன்பிடி தொழில் செய்து வந்த இவா், கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றாா். அங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், வாழ்முனிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சவூதி அரேபியாவில் கடந்த அக்.3-ஆம் தேதி அவா் உயிரிழந்ததாக, அவருடன் பணியாற்றி வந்தவா்கள் மூலம் அவரது மனைவி லோகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சவூதி அரேபியாவில் உள்ள கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை அவரது மனைவி லோகேஸ்வரி மேற்கொண்டாா். ஆனால், செலவுகளை ஏற்கும் நிலையில் அவரது குடும்பம் நிலை இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த லோகேஸ்வரி, சவூதி அரேபியாவில் உள்ள தனது கணவரின் உடலை அரசு உதவியுடன் மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தாா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

வாழ்முனியின் உடலை மீட்டு வரக் கோரி கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த அவரது குடும்பத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments