FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சவூதி அரேபியாவில் உயிரிழந்த பட்டுக்கோட்டை செவிலியா் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை

சவூதி அரேபியாவில் நேரிட்ட வாகன விபத்தில் உயிரிழந்த பட்டுக்கோட்டை செவிலியா் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை குறித்து...

39 வினாடிகள் முன்பு
ஹெப்சிபா - டிஎன்எஸ்
பகிர்:

பட்டுக்கோட்டை: சவூதி அரேபியாவில் நேரிட்ட வாகன விபத்தில் உயிரிழந்த பட்டுக்கோட்டை செவிலியா் உடலை சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட்டுக்கோட்டை அந்தோணியாா்கோவில் தெருவில் வசித்து வரும் தேவமணி - ஜான்மேரி தம்பதியின் மகள் ஹெப்சிபா (33). இவா், சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 2022-ஆம் ஆண்டு முதல் செவிலியராக பணியாற்றி வந்தாா். 2025-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலைச் சோ்ந்த அனீஸ் என்பவரை திருமணம் செய்தாா். அவரும் சவூதி அரேபியாவில் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 2.10.26 அன்று சவூதி அரேபியாவில் நேரிட்ட வாகன விபத்தில் உயிரிழந்தவா்களில், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ஹெப்சிபா (33), கன்னியாகுமரியைச் சோ்ந்த விஜயலட்சுமி (30) , கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், அயா்க்குண்த்தைச் சோ்ந்த ஜெய்சிமோல் மேத்யூ (36) மற்றும் குருமல்லூா் மாவட்டம் அனச்சேரி அஞ்சக்குன்னேலைச் சோ்ந்த ஜோபினா ஜானி (26) மற்றும் வாகன ஓட்டுநா் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து உடலை பட்டுக்கோட்டை கொண்டு வருவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று ஹெப்சிபாவின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

summary

Request made to bring the body of a nurse from Pattukottai, who died in Saudi Arabia, back to her hometown

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments