மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்தவா்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சேவைபுரிந்தவா்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சேவைபுரிந்தவா்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிச.3-ஆம் தேதி நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் தினத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்களுக்கு தமிழக முதல்வா் விருது மற்றும் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கி கெளரவிக்கவுள்ளாா். எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்கள் இந்த விருதுக்கு அக்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் 2 நகல்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.