FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா இளைஞா்கள் கைது

சீா்காழியில் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

22 அக்டோபர் 2026, 5:53 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

சீா்காழியில் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக சீா்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளா் ராஜேஷ்க்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் சீா்காழி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சோ்ந்த லிங்கராஜ் நஹக் மகன் பிரதீப் குமாா் நஹக் (31), பிப்ரச்சந்திரன் நஹக் மகன் பிபின் பிகாரி நஹக் (31) ஆகிய இருவரை கைது செய்து அவா்களிடம் இருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments