FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 101 கிலோ கஞ்சா பறிமுதல்

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 101 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தது தொடர்பாக...

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தவரை கைது செய்து அழைத்துச் செல்லும் போலீசார். - டிஎன்எஸ்
பகிர்:

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே போலீசார் நடத்திய தீவிர சோதனையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 101 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெலீரியன் பீரோ (36) என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெரிய பைகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.

அவர் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 101 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெலீரியன் பீரோ (36) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பெலீரியன் பீரோவை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்

இதையடுத்து அவர் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, கஞ்சா எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கும்மிடிப்பூண்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

101 kg of Ganja seized near Gummidipoondi railway station

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments