சீர்காழி அருகே மாணவர்களை கதண்டு வண்டுகள் கடித்தன!
சீர்காழி அருகே மாணவர்களை கதண்டு வண்டுகள் கடித்தது பற்றி...
சீர்காழி அருகே பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் உள்பட 7 பேரை கதண்டு வண்டுகள் கடித்த நிலையில், அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி தாலுகா வள்ளுவக்குடி, ஆதமங்கலம், அரூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் இன்று வழக்கம்போல் சீர்காழி கோயில்பத்து பகுதியில் உள்ள பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அதேபோல் பொதுமக்களும் இருசக்கர வாகனங்களில் சீர்காழிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஊமமதகு என்ற பகுதியில் உள்ள புளியமரத்தில் அமைந்திருந்த கதண்டு வண்டுகளின் கூடு எதிர்பாராதவிதமாக கலைந்து, அவ்வழியாகச் சென்ற மாணவர்கள் பொதுமக்களை கடித்தன.
Advertisement
Advertisement
கதண்டு வண்டுகள் கடித்ததில் கடும் வலியால் துடித்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஆதமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆதேஷ் (13 ) வள்ளுவக்குடி பகுதியைச் சேர்ந்த தரனேஷ் (12) மற்றும் பத்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீஹரி (15), பாலகுமார் (44), கலையரசன் (48) உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
Near Sirkazhi, students were stung by hornets!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.