தகட்டூரில் இந்திய கம்யூ. கட்சியினர் மறியல்
வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் இளைஞர் பெருமன்ற நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் இளைஞர் பெருமன்ற நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த எம். கார்த்திகேயன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் வேதாரண்யம் ஒன்றியச் செயலாளராக உள்ளார். அண்மையில், அந்த பகுதியில் கட்சியின் தலைவர்களை வரவேற்று இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் வைக்கப்பட்ட பதாகைகள் சேதப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த கா. ராசேந்திரன், ரா. பூபாலன், வீ. ஸ்டாலின் ஆகியோர் கார்த்திகேயனை வழிமறித்து தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததோடு, முகநூலில் அவதூறு தகவலை பரப்பினராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், எதிரிகளுக்கு சாதகமாக செயல்பட்டதோடு,அவர்களிடம் எதிர் புகார் மனு வாங்கி வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மறியல் நடைபெற்றது.
தகட்டூர் கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு இந்திய கம்யூ.கட்சி ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தார். இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜெயா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டக்காரர்களிடம் டிஎஸ்பி ஆசைத்தம்பி, வட்டாட்சியர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால், வேதாரண்யம்-பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.