FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வாய்க்காலில் உடைப்பு; பள்ளியைச் சூழ்ந்தது தண்ணீர்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், சித்தமல்லி கிராமத்தில் வாய்க்காலில்   புதன்கிழமை உடைப்பு  ஏற்பட்டு, அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தண்ணீர் புகுந்தது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:51 am IST
பகிர்:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், சித்தமல்லி கிராமத்தில் வாய்க்காலில்   புதன்கிழமை உடைப்பு  ஏற்பட்டு, அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தண்ணீர் புகுந்தது.
சித்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகாமையில் உள்ள சித்தமல்லி கிராம  பாசன வாய்க்கால் தூர்வாரப்படாத நிலையில், வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, பள்ளி வளாகத்தினுள் தண்ணீர் புகுந்தது. பள்ளியைச் சுற்றி தண்ணீர் தேங்கியதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  சிரமம் ஏற்பட்டது.
மயிலாடுதுறை வட்டாட்சியர் து. விஜயராகவன்,  சித்தமல்லி கிராமத்துக்குச் சென்று பள்ளியை பார்வையிட்டதுடன், வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments