FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாகுபடி வயலில் வேளாண் துறை அலுவலர் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில் சென்னை வேளாண்மை இயக்குநரக மண்டல அலுவலர் ரபியுல்லா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில் சென்னை வேளாண்மை இயக்குநரக மண்டல அலுவலர் ரபியுல்லா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசின் உத்தரவுப்படி, விவசாயிகளுக்கு இயந்திர நடவு பின்னேற்பு மானியத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் பின்னேற்பு மானியம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வேளாண்மை இயக்குநரக மண்டல அலுவலர் ரபியுல்லா, மயிலாடுதுறை வட்டம், அகரகீரங்குடி, செறுதியூர், குளிச்சார், ஆனந்ததாண்டவபுரம், தாழஞ்சேரி மற்றும் மணல்மேடு பகுதிகளில் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பின்னேற்பு மானியம், விதை விநியோகம், மேட்டூர் தண்ணீர் வந்தடைந்துள்ள பகுதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநர் எம். நாராயணசாமி (நாகை), உதவி இயக்குநர்  எஸ். சுப்பையன்(மயிலாடுதுறை) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments