FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்று சிவசுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை நகரம், கூறைநாடு, கோவில் ஆராயத்தெருவில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணியர் கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (ஆக. 30) நடைபெறவுள்ளது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

மயிலாடுதுறை நகரம், கூறைநாடு, கோவில் ஆராயத்தெருவில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணியர் கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (ஆக. 30) நடைபெறவுள்ளது.
செங்குந்தர் சமூக மக்களுக்குச் சொந்தமான இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவுப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அருள்மிகு வள்ளி தெய்வானை உடனமர் சிவசுப்பிரமணியர் சுவாமி மற்றும் பரிவாரத் தெய்வங்களான ஐயப்ப சுவாமி உள்ளிட்ட கோயில்களின் சன்னிதிகளுக்கும் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வியாழக்கிழமை (ஆக. 30) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, மாலை நேர நிகழ்வாக வள்ளி, தெய்வானை உடனமர் சிவசுப்பிரமணியர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் பொன். ஜெகன்நாதன், அறங்காவலர்கள்,  திருப்பணிக் குழுவினர் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments