FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

விதிகளுக்கு புறம்பான குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவு

விதிகளுக்கு புறம்பான வகையில் இணைக்கப்பட்டிருந்த 81 குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட சமூக நலத்துறை தனித் துணை ஆட்சியர் வேலுமணி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். 

Updated On : 7 ஜூன் 2018, 7:59 am IST
பகிர்:

விதிகளுக்கு புறம்பான வகையில் இணைக்கப்பட்டிருந்த 81 குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட சமூக நலத்துறை தனித் துணை ஆட்சியர் வேலுமணி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். 
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஜமாபந்தியின்போது வைத்தீஸ்வரன்கோயில் அருகேயுள்ள கரைமேடு கிராமத்தில் வசிக்கும் சுமார் 50 குடும்பத்தினர் குடிநீரின்றி தவிப்பதாக மாவட்ட சமூக நலத்துறை தனித் துணை ஆட்சியர் வேலுமணியிடம் புகார் அளித்தனர். 
புகாரின்பேரில், துணை ஆட்சியர் வேலுமணி செவ்வாய்க்கிழமை கரைமேடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டிக்கு செல்லும் நீரேற்றும் குழாயில் விதிகளுக்கு புறம்பாக 13 இடங்களிலும், இதே கிராமத்தில் பல்வேறு இடங்களில் 68 இணைப்பு ஏற்படுத்தி குடிநீர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. பின்னர், உடனடியாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வந்த 81 இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட்டு, அப்பகுதியில் பழுதான இரு கைப்பம்புகளை உடனடியாக சரி செய்ய வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் ஞானசெல்வி, ரெஜினாராணி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார். 
இதேபோல், அதேபகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதாகி இருந்த கைப்பம்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தவிர, புதிதாக 200 அடியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் மேலகரைமேடு, நடுகரைமேடு, தெற்குகரைமேடு ஆகிய பகுதி மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆய்வின்போது, சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments