கார் டயர் வெடித்து விபத்து; ஒருவர் சாவு
நாகூர் அருகே டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
நாகூர் அருகே டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை கோட்டூர், பொண்ணு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முரளிகிருஷ்ணா மனைவி கிருஷ்ணகுமாரி (46). அதே பகுதியைச் சேர்ந்த மதனகோபால் மனைவி சுகுணா (66), எத்திராஜ் மகன் ராஜ்குமார் (35), இவரது மனைவி பிரீத்தி (25), இவர்களது மகள் இரண்டரை வயது ஜெயநவீதா. உறவினர்களான இவர்கள் 5 பேரும் வேளாங்கண்ணிக்கு காரில் வந்துள்ளனர். அங்கு, பிரார்த்தனையை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் சென்ற காரை ராஜ்குமார் ஓட்டியுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றபோது, நாகூர் வெட்டாற்று பாலம் அருகே காரின் இடது பக்கம் உள்ள முன்புற டயர் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 5 பேரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி கிருஷ்ணகுமாரி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நாகூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.