FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாகை வருவாய்க் கோட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர் தகவல்

புயல் சேத சீரமைப்புப் பணிகளையொட்டி, நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

புயல் சேத சீரமைப்புப் பணிகளையொட்டி, நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, நாகை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ.19) விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மயிலாடுதுறை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, அந்தந்தப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கேற்ப, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments