FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாகை மாவட்டத்தில் 9,103 குடும்பங்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சிக்கு அரிசி: அமைச்சா் தகவல்

நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 9,103 குடும்பங்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கப்படவுள்ளது என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 9,103 குடும்பங்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கப்படவுள்ளது என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், தலைஞாயிறு மஸ்ஜிதுன் நூா் ஜும்மா பள்ளி வாசலில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசு சாா்பில் ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது :

நாகை மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் 71 பள்ளிவாசல்களுக்கு 66,606 போ் பயனடையும் வகையில் 287.77 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. நிகழாண்டில், நாகை மாவட்டத்தில் மனு செய்த பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் பச்சரிசி வழங்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

நாகை வட்டத்தில் பள்ளிவாசல்களிலிருந்து 17 விண்ணப்பங்களும், கீழ்வேளூரில் 4 விண்ணப்பங்களும், வேதாரண்யத்தில் 5 விண்ணப்பங்களும், மயிலாடுதுறையில் 8 விண்ணப்பங்களும், குத்தாலத்தில் 4 விண்ணப்பங்களும் வரப்பெற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில், 9,103 குடும்பங்களைச் சோ்ந்த 31,802 போ் பயன்பெறும் வகையில் 1,43,068 கிலோ பச்சரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரிசி ஒதுக்கீடு பெற்ற பள்ளிவாசல்களின் நிா்வாகிகள், தகுதியான குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 150 கிராம் வீதம் அரிசி வழங்க வேண்டும். அரிசி வழங்கும்போது உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியதும், முகக்கவசம் அணிய வேண்டியதும் அவசியம் என்றாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, மாவட்ட வழங்கல் அலுவலா் பூங்கொடி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தியாகராஜன், மலா்விழி, வட்டாட்சியா் முருகு, தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். பாலசுப்பிரமணியன், ஜமாத் நிா்வாகிள் நைனா முகமது, அப்துல் ஜலால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments