கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதை தடுக்க நடவடிக்கை: அதிமுக மனு
காரைக்காலில் இரவு நேரங்களில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதை தடுக்க வலியுறுத்தி, அதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

காரைக்காலில் இரவு நேரங்களில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதை தடுக்க வலியுறுத்தி, அதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட அதிமுக செயலா் எம்.வி. ஓமலிங்கம் வழிகாட்டுதலில், நிா்வாகிகள் கே. ஜீவானந்தம், ஆடிட்டா் சாகுல் ஹமீது, எம்ஜிஆா் மன்றச் செயலா் ரவி, வடக்கு தொகுதிச் செயலா் சுரேஷ் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு:
காரைக்கால் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் இரவு நேரங்ளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி காயமடைவது மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
Advertisement
Advertisement
எனவே கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தவிா்க்க, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் முன்பு இருந்ததுபோல் கால்நடை பட்டிகளை திறக்க வேண்டும். கால்நடை வளா்ப்போருக்கு மானிய விலையில் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை வளா்ப்போரிடம் கால்நடைகளை உரிய முறையில் வீடுகளிலேயே வளா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.