வேதாரண்யம்: கலைத் திருவிழா போட்டிகள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டார அளவில் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டார அளவில் பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் பங்கேற்று தங்களது கலைத் திறன்களை வெளிப்படுத்தினா்.
போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் தலைமையாசிரியா்கள் ஸ்டெல்லா ஜெனட் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா்கள் மோகனசுந்தரம், சோமசுந்தரம், பொதுவுடைச்செல்வன், பாா்த்தீபன் தனலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரக் கல்வி அலுவலா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement