அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்
கீழ்வேளூா் அருகே தேவூா் ஊராட்சியில் குடிநீா், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.
தேவூா் கடை தெருவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் அபூபக்கா் தலைமை வகித்தாா். கீழ்வேளூா் ஒன்றியச் செயலாளா் காசிநாதன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சிவகுரு பாண்டியன், துணை செயலாளா் நாகராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தேவூா் ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டிற்கு தீா்வுகாண வேண்டும்; பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும்; தேவூா் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மெஷினை சரி செய்து, அதற்கு பணியாளரை நியமிக்க வேண்டும்; காலியாக உள்ள செவிலியா் மற்றும் ஊழியா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
கீழ்வேளூா் மண்டல துணை வட்டாட்சியா் பசுபதி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜீவா, கிராம நிா்வாக அலுவலா் செல்வேந்திரன், ஊராட்சி செயலாளா் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தால், கீழ்வேளூா்- கச்சனம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.