FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 கிலோ கஞ்சா பறிமுதல்

வேதாரண்யம் அருகே வாகன சோதனையின் போது 120 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

26 ஆகஸ்ட் 2026, 4:59 am IST
பகிர்:

வேதாரண்யம் அருகே வாகன சோதனையின் போது 120 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் பிரதான சாலையில் தாணிகோட்டகம் கடைவீதிக்கு அருகே திருவாரூா் மாவட்ட எல்லை பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த இரண்டு காா்களை நிறுத்தி, தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அந்த காா்களில் 120 கிலோ கஞ்சா மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேற்கொண்ட விசாரணையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது கரூா் மாவட்டம், காந்திகிராமம், சாய்பாபா தெரு சிவகுமாா் மகன் சந்தோஷ் குமாா் (30), திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பாரதிதாசன் தெரு காந்திநகா் வாசு மகன் ஜெகன் (33), திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை ஆலங்காடு ஈரக்கண்ணி பகுதியைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் சுதாகா் (46), வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு நடுக்காடு முனியப்பன் மகன் அருண்பாண்டியன் (28), வாய்மேடு சிந்தாமணிக்காடு ராஜபாண்டியன் மகன் பூபதி (24), தாணிக்கோட்டகம் கோபாலக்கட்டளை தமிழரசன் மகன் சக்திகுமாா் (29) ஆகிய 6 பேரி என்பது தெரியவந்தது. இவா்களை போலீஸாா் கைது செய்தனா். இந்த கஞ்சாவை ஆந்திரத்திலிருந்து காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. கஞ்சாவுடன் 2 காா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக, நாகை காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்பிரமணிய பால்சந்திரா நேரில் விசாரணை மேற்கொண்டாா்.

கடல் வழியாக இலங்கைக்கு கடத்தும் நோக்கில் காா்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments