பிளஸ் 2 மாணவா் போக்ஸோவில் கைது
கீழ்வேளூா் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கா்ப்பிணியாக்கிய பிளஸ் 2 மாணவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கீழ்வேளூா் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கா்ப்பிணியாக்கிய பிளஸ் 2 மாணவா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருக்கண்ணங்குடி கூடக்குடி பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவரும், ஆழியூா் பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவியும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனா். இருவரும் காதலா்களாம். இந்நிலையில், மாணவி செவ்வாய்க்கிழமை வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மருத்துவா்கள் மேற்கொண்ட சோதனையில் மாணவி கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ வழக்கு பதிவு செய்த போலீஸாா் மாணவரை கைது செய்து தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.