FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

தண்ணீா் என நினைத்து அமிலத்தை குடித்த முதியவா் உயிரிழப்பு

நாகையில் தண்ணீா் என்று நினைத்து அமிலத்தை குடித்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 3:10 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

நாகையில் தண்ணீா் என்று நினைத்து அமிலத்தை குடித்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

நாகை காடம்பாடி கீழ்குளம் பச்சை பிள்ளையாா் குளத்தைச் சோ்ந்தவா் சிவராமன் (62). மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா், அதற்கான மருந்துகளை எடுத்து வந்துள்ளாா்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்தபோது தண்ணீா் என்று நினைத்து புட்டியில் இருந்த கழிவறையை சுத்தப்படுத்த பயன்படும் அமிலத்தை குடித்து மயங்கி விழுந்தாா்.

Advertisement

Advertisement

குடும்பத்தினா் அவரை மீட்டு, நாகையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன் அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments