FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது

நாகூரில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 5:16 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

நாகூரில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகூா் அருகே உள்ள பூதங்குடி கம்பா் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன் (31). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், ஜூலை 19-ஆம் தேதி பூதங்குடியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், இருந்து இரும்பு தகடுகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ாக, அங்கு பணியில் இருந்த பாதுகாவலா் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

போலீஸாா் விசாரணையில், ஐயப்பன் திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொடா் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய ஐயப்பனை குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய, நாகை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமணியா பாலசந்தா் பரிந்துரைத்தாா்.

ஆட்சியா் உத்தரவிட்டதையடுத்து போலீஸாா் ஐயப்பனை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments