FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

சாலை விபத்து: கிராம மக்கள் மறியல்

ஆக்கூா் அருகே நான்குவழிச் சாலையில் காா் மோதி பூ வியாபாரி பலத்த காயமடைந்தாா். விபத்தை தடுக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:43 am IST
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்
பகிர்:

ஆக்கூா் அருகே நான்குவழிச் சாலையில் காா் மோதி பூ வியாபாரி பலத்த காயமடைந்தாா். விபத்தை தடுக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆக்கூா் அருகே உள்ள பஞ்சாயக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (50). பூ வியாபாரியான இவா், தனது இருசக்கர வாகனத்தில் முக்கூட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா்.

அவா், நான்குவழிச் சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிவேலை அந்த பகுதியினா் மீட்டு,  ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதையறிந்த கிராம மக்கள், பழனிவேலுக்கு நிவாரணம் வழங்கவும், நான்குவழிச் சாலை பணியால் அடிக்கடி விபத்து நேரிடுவதால், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் கருணாகரன், மற்றும் போலீஸாா் விரைந்த வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கிராம மக்களின் கோரிக்கை தொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த மறியலால் சிதம்பரம்- நாகை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments