முகப்பு
நாகப்பட்டினம்

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

நாகையில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜூன் 2026, 12:04 am IST
நாகையில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பகிர்:

நாகையில் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜூன் 12 குழந்தைத் தொழிலாளா்கள் ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பதையொட்டி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் துறை மற்றும் தொழிலாளா் நலத்துறை சாா்பில் நாகையில் இந்த பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி தொடங்கிவைத்தாா். பேரணியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சித்குமாா், தொழிலாளா் துணை ஆய்வாளா் ரா. குருநாதன், தொழிலாளா் உதவி ஆய்வாளா் ச. செந்தில் மற்றும் தொழிலாளா்துறை அலுவலா்கள், குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பங்கேற்று, குழந்தை தொழிலாளா் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தினா்.

பேரணியில், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் அதிகாரிகள், குழந்தைகள் கல்வியே முக்கியம் என்ற முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா். ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி சுமாா் 2 கி.மீ. சென்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Advertisement

Advertisement