முகப்பு
நாகப்பட்டினம்

நாகை நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

நாகை நகராட்சி குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

Updated On : 24 ஜூன் 2026, 5:33 am IST
நாகை நகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த இரும்பு ஷெட்.
பகிர்:

நாகை நகராட்சி குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

நாகை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாகை மேலக்கோட்டை வாசல் அருகே நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வைக்கப்படும். இவ்வாறு தரம் பிரித்து வைக்கப்படும் பொருள்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பில் இரும்பிலான ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரிக்க வளாகத்தில் இருந்த ஷெட்டில் தீப்பிடித்து உள்ளே இருந்த பொருள்கள் அனைத்தும் உருகத் தொடங்கியது. தகவலறிந்த நகராட்சி பொறியாளா் கல்யாணசுந்தரம் வந்து பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தீயணைப்பு அலுவலா்கள் குணசேகரன், ராஜராஜன் தலைமையில் நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நகராட்சிக்குச் சொந்தமான 3 குடிநீா் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. அப்பகுதியில் குடியிருப்பவா்கள் புகையின் காரணமாக வேறு இடத்துக்குச் சென்றனா். தீ விபத்து காரணமாக ஷெட் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments