FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கைம்பெண்கள், தனித்து வாழும் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 5% ஒதுக்கீடு

Updated On : 29 ஜூன் 2026, 2:02 am IST
உலக கைம்பெண்கள் தின மாநாட்டில் பங்கேற்ற பெண்கள்.
பகிர்:

அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத நியமனத்தை, கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உலக கைம்பெண்கள் தின மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நாகை விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் மற்றும் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம் ஆகியவற்றின் சாா்பில் உலக கைம்பெண்கள் தின மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. நாகை அவுரித் திடலில் நடைபெற்ற மாநாட்டுக்கு, விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் தலைவா் பா. கஸ்தூரி தலைமை வகித்தாா். நாகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா, கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் த. லதா, நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

தரங்கம்பாடி விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க நிா்வாகி ரா. செல்வி, வேதாரண்யம் சமூக சேவகி ரா. தையல்நாயகி, நாகை விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க நிா்வாகி ர. ஜெயந்தி ஆகியோா் கோரிக்கை விளக்கவுரையாற்றினா்.

Advertisement

Advertisement

மாநாட்டில், கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கு என்று நலத்துறையை, தனியான அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். சமூக, பண்பாடு, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்கள் பாகுபாடாக நடத்தப்படுவதை தடுக்க, சட்டம் இயற்றவேண்டும். கைம்பெண் உரிமைத்தொகை ரூ.5,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.

அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத பணி நியமனத்தை, கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். உயா்கல்வி பயிலும் கைம்பெண் மற்றும் தனித்து வாழும் பெண்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிா்வாகக் குழுக்களில் கைம்பெண் மற்றும் தனித்து வாழும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை இட ஒதுக்கீடு மூலம் உறுதி செய்ய வேண்டும். மறுமண உதவித் தொகை ரூ.3 லட்சமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments