முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 218 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Updated On : 30 ஜூன் 2026, 2:11 am IST
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளுடன் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா்.
பகிர்:

நாகையில் சட்டவிரோதமாக கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 218 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகை கடற்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நாகை கீரைக்கொல்லைத் தெரு பகுதியில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், நாகை கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிவசங்கா், ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையில், சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் ஆனந்த வடிவேல், மகாலிங்கம், வீரசக்திவேல் மற்றும் காவலா்கள் மற்றும் நாகை வனத்துறை வனவா் இந்துமதி, வனக்காப்பாளா் உலகநாதன் ஆகியோா் திங்கள்கிழமை கீரைக்கொல்லைத் தெருவில் உள்ள அந்த வீட்டில் சோதனையிட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது கடத்துவதற்காக, பதப்படுத்தப்பட்ட நிலையில் 5 பெட்டிகளில் இருந்த சுமாா் 218 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் கைப்பற்றினா்.

போலீஸாா் விசாரணையில், பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்த தவசிமுத்து மகன் முருகானந்தம் என்பவா் இவற்றை பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது. அவா் மீது வழக்குப்பதிந்த போலீஸாா், கடல் அட்டைகளை பறிமுதல் செய்து நாகை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments