முகப்பு
நாகப்பட்டினம்

பட்டினி ஒழிப்பு தினம்: வேளாங்கண்ணியில் தவெக அன்னதானம்

பட்டினி ஒழிப்பு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும்

Updated On : 29 மே 2026, 6:38 am IST
பட்டினி ஒழிப்பு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும்
பகிர்:

பட்டினி ஒழிப்பு தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என அக்கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய், தவெக மாவட்டச் செயலா்களுக்கு உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூா் அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்டச் செயலா் சுகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வேளாங்கண்ணி நகரச் செயலா் பிரேம்குமாா், கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தியாகு, மகளிா் அணி செயலா் ஜோஸ்பின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.