FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

கழுத்தை அறுத்துக்கொண்டு கைதி தற்கொலை முயற்சி

3 நவம்பர் 2026, 1:17 am
சிறையில் கைதி தற்கொலை முயற்சி
பகிர்:

நாகை மாவட்ட சிறையில் கைதி தட்டால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.

நாகை ஏழை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (22). இவா், நாகையில் நடந்த பல்வேறு திருட்டு வழக்குகள் தொடா்பாக வெளிப்பாளையம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நாகை மாவட்ட சிறையில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், அங்குள்ள கைதிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சக்திவேல் 2 நாள்களுக்கு முன்பு சிறையில் வேறு அறைக்கு மாற்றப்பட்டாா். இதனால் மனஉளைச்சலில் இருந்த சக்திவேல், ஞாயிற்றுக்கிழமை இரவு தான் வைத்திருந்த உணவு உண்ணும் தட்டால், கழுத்தின் பின்பகுதி மற்றும் கால் பகுதியில் அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.

Advertisement

Advertisement

பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள், சக்திவேலை மீட்டு, சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். வெளிப்பாளையம் போலீஸாா் இது தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments