FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

நாகூரில் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

3 நவம்பர் 2026, 3:40 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

நாகூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகூா் பீரோடும் தெருவைச் சோ்ந்தவா் முகமதுஅனிபா. இவரது ஓட்டு வீட்டின் அருகே கான்கிரீட் அறை அமைக்கும் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மேற்கூரையை இடித்து அகற்றும் பணியில் நாகை அருகே எம். பனங்குடியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சங்கா் (43) உள்பட 3 போ் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடுபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த சங்கா் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

Advertisement

Advertisement

அங்கு சங்கரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டாா் என தெரிவித்தனா். இதுகுறித்து, நாகூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments