FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாகை மாவட்டத்துக்கு நவ. 20 உள்ளூர் விடுமுறை!

நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நவம்பர் 20-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...

50 வினாடிகள் முன்பு
நாகூா் தா்கா கந்தூரி விழா
பகிர்:

நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நவம்பர் 20-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகூர் தர்காவில் 470ம் ஆண்டு கந்தூரி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காகப் பயன்படுத்தும் கொடியானது சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக நாகூர் வந்தடைந்தது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வருகிற 20-ஆம் தேதி நடைபெறுவதால், இதனை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச. 5-ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.