சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பெண் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை
ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, நாகை மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, நாகை மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை காடம்பாடியில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் பணியாற்றியவா் சசிகலா (41). இவா், கடந்த 2023 ஜூன் மாதத்தில், காப்பகத்தில் இருந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுதொடா்பாக, காப்பக இயக்குநா் ரமேஷ் அளித்த புகாரின்பேரில், வெளிப்பாளையம் போலீஸாா், போக்ஸோ சட்டப் பிரிவுகளின்கீழ் சசிகலாவை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை, நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். ராஜ்குமாா், குற்றவாளி சசிகலாவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் 3 மாதம் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.