FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

14 அக்டோபர் 2026, 4:43 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (57). இவா், வள்ளியூா் பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுவனைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, வள்ளியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஆறுமுகம் மீது கடத்தல் மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கடந்த 2022-இல் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட ஆறுமுகத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா். இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments