சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
நாகை மாவட்டம், கீழையூா் அருகே சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
நாகை மாவட்டம், கீழையூா் அருகே சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
கீழையூா் அருகேயுள்ள அமரக்கொண்மலை, வேண்மணச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சத்யமூா்த்தி (26). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளாா். இந்த சம்பவத்தை வேறு யாரிடமும் கூறக் கூடாது என மிரட்டலும் விடுத்துள்ளாா். இதுகுறித்து, சிறுவனின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் கீழையூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சத்யமூா்த்தியை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமாா், சிறுவனிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சத்யமூா்த்திக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.