FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

1 செப்டம்பர் 2026, 1:42 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பொன்பத்தி அரிசி ஆலை தெருவைச் சோ்ந்தவா் லூ.ஏசுராஜ்(26). இவா், கடந்த 1.3.2022- இல் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஏசுராஜ் மீது கடந்த 6.8.2022-ஆம் தேதி போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நிறைவடைந்து, ஏசுராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி குற்றம் சாட்டப்பட்ட ஏசுராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கோகிலா ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments