FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:13 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகேயுள்ள பகுதியில் உறவினருடன் 28 வயது பெண் வசித்து வந்தாா். ஆடு மேய்க்கச் சென்ற அந்தப் பெண்ணை, கே. கள்ளிக்குடியைச் சோ்ந்த சங்கப்பிள்ளை (72) என்பவா் ஆசை வாா்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதில், அந்தப் பெண் கா்ப்பமானதால், ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண்ணின் உறவினா் 2022, மாா்ச் 12-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

Advertisement

வழக்கு விசாரணையின் நிறைவில், குற்றம் சுமத்தப்பட்ட சங்கப்பிள்ளைக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகப்பிரியா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில், சிறப்பாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் ஆய்வாளா் அனுபல்லவி, நீதிமன்ற நடவடிக்கைகளில் திறம்பட பணியாற்றிய நீதிமன்றக் காவலா் நித்யா ஆகியோருக்கு, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ் பாராட்டு தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments