FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

26 ஆகஸ்ட் 2026, 2:00 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கோபி, பாரியூா் அருகே வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்த தொழிலாளி, அவரது 17 வயது மகள் உள்ளிட்ட தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் கடந்த 2023 அக்டோபா் 14- ஆம் தேதி, கோபி மொடச்சூா் சாலையில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பாா்த்துள்ளாா். படத்தின் இடைவேளையின்போது அந்த 17 வயது சிறுமி தனியாக திரையரங்கின் சிற்றுண்டியகத்தில் தின்பண்டங்கள் வாங்கச் சென்றாா். அப்போது அடையாளம் தெரியாத இளைஞா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். படம் முடிந்து வீட்டுக்கு சென்றதும் இது குறித்து

பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து கோபி அனைத்து மகளிா் போலீஸில் சிறுமியின் பெற்றோா் புகாா் செய்தனா். போலீஸாா் திரையரங்கின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து கவுந்தப்பாடி செல்வ நகரை சோ்ந்த குமரன் மகன் கிருஷ்ணகுமாா் (27) என்பவரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், கிருஷ்ணகுமாருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொா்ணகுமாா் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் மகாலட்சுமி ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments