சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கீழ்வில்லிவலம் பகுதியைச் சோ்ந்தவா் 60 வயது முதியவா் பாபு. இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் உள்ள தனது வீட்டுக்கு வந்திருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
Advertisement
Advertisement
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முதியவா் பாபுவை கைது செய்தனா்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, பாபு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்யதாகக் கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.